ராமசாமி படையாட்சியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை! - ராமசாமி படையாச்சியார் சிலை
ராமசாமி படையாட்சியாரின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்கள் பங்கேற்றனர்.