கூட்டு குடிநீர் திட்டம்: 2035 வரை மக்கள் பயன் பெறுவார்கள் - அமைச்சர் சாமிநாதன் - கூட்டு குடிநீர் திட்டம்
கோயம்புத்தூர்: அன்னூர், மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படைத் தளம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி, பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இத்திட்டத்தின் மூலம் 2035 வரை மக்கள் பெறுவார்கள் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.