ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்த அமைச்சர் - தமிழ் செய்திகல்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ஜவுளி கடைகள், நகைக்கடைகள், விசைத்தறி கூடங்கள் உள்ளிட்டவைகள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார். ஊரடங்கு காரணமாக கோயில் நடை பூட்டப்பட்டிருந்ததால் கோயில் வளாகத்தின் அருகே உள்ள யானை கட்டும் இடத்திற்கு சென்று கோயிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா என்ற யானைக்கு வெல்லம், பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி ஆசி பெற்றார்.
Last Updated : May 16, 2020, 11:22 PM IST