கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டே மாணவர் சேர்க்கை! - கள்ளக்குறிச்சி அண்மைச் செய்திகள்
கள்ளக்குறிச்சியின் சிறுவங்கூரில் சுமார் ரூ.398.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்தாண்டே இந்த கல்லூரியில் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.