பொங்கல் விழா: கும்மியடித்துக் கொண்டாடிய ஆசிரியைகள்! - எம்.ஜி.ஆர்.நகர் மேல்நிலைப் பள்ளி
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகள், கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்துக்கொண்டார். இதையடுத்து, பள்ளி ஆசிரியைகள் குழுவாக இணைந்து கும்மியடித்து தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டனர்.