எம்ஜிஆர் பிறந்தநாள்: வாணியம்பாடியில் அன்னதானம் - தலைவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.சம்பத்குமார், அதிமுக நகர செயலாளர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக நிவாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.