திக் திக் நிமிடங்கள்... காட்டுயானைகளிடம் சிக்கிய மனநல நோயாளி! - ஈரோட்டில் யானைகள்
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுத்தேடி சாலைக்கு வருவது வழக்கம். அதன்படி பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை திம்பம் அருகே காட்டுயானைகள் கூட்டம் சாலையை ஆக்கிரமித்தது. அப்போது சாலையோரமாக நின்றுகொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நோக்கி யானைகள் நெருங்கின. இருப்பினும் அவர் நகராமல் அங்கேயே நின்றார். யானைகள் அவரை ஒன்றும் செய்யாமல் வனப்பகுதிக்குள் திரும்பின. இதனை பார்த்துக்கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காட்டுயானைகள் தாக்கிவிடுமோ என்ற அச்சத்துடனே இருந்தனர்.