ஊட்டி தாவரவியல் பூங்காவை தொடங்கி வைத்த ’வில்லியம் கிரஹாம்’ நினைவு தினம் அனுசரிப்பு
உலகப் புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கும் பணிகளை, கடந்த 1848ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் கிரஹாம் மெக்வோர் என்பவர் தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்து 1867ஆம் ஆண்டு ஊட்டி தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மரங்களும், மலர் செடிகளும் எடுத்து வந்து நடப்பட்டன. இந்தப் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் 1876ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்நிலையில், அவரது 145ஆவது நினைவு தினம் இன்று (ஜூன்.08) கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது கல்லறையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தாவரவியல் பூங்கா அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.