மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி விழா - மாயூரநாதர் ஆலய மகா சிவராத்திரி விழா
நாகை: மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக 14ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி 20ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் 3ஆம் நாளில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கலாதரா ஆர்ட்ஸ் அகாடமி ரம்யா பாலகிருஷ்ணன், மாணவிகள் ஆகியோர் சுவாமி தயானந்த சரஸ்வதி, ஆதிசங்கரர் இயற்றிய கீர்த்தனைகளுக்கு நடனமாடினர். பரத நாட்டிய நிகழ்வுகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.