கடைமடை வந்தது காவிரி நீர்: மயிலாடுதுறை விவசாயிகள் மகிழ்ச்சி - விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருவாலாங்காட்டிற்கு, நேற்று (ஜூன்.19) காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் இந்த மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.