சம்பா பயிர்களில் கொக்கிப் புழு - விவசாயிகள் கவலை - சம்பா பயிர்களில் கொக்கிப் புழு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் மழை நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களில் கொக்கிப் புழு உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழையில் எஞ்சிய பயிர்களைக் காப்பாற்ற உரமிட்டு வந்த நிலையில், தற்போது புழுக்களுக்கான மருந்து செலவும் கூடியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.