கோள்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் நிகழ்வு! - etvtamil
திண்டுக்கல்: செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்கள் ஒன்றையொன்று நெருங்கிவரும் நிகழ்வு கொடைக்கானலில் நேற்று (ஜூலை 12) வானில் தெளிவாக தென்பட்டது. செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறைசந்திரன் தென்பட்டது. இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் காட்சியை தொலைநோக்கி போன்று எந்தவித கருவிகளும் இல்லாமல் வெறும் கண்களால் காணமுடியும் எனவும் இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் இந்திய வானியற்பியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 13, 2021, 2:36 PM IST