பாலக்காடு நூர்ஜஹான் உணவகத்தில் பயங்கர தீ விபத்து - நூர்ஜஹான் உணவகம்
கேரள மாநிலம் பாலக்காடு ஸ்டேடியம் பேருந்து நிலையம் அருகேயுள்ள நூர்ஜஹான் உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உணவகத்தின் கட்டடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. உயிரிழப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.