நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி - மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டத்திலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது மதுராந்தகம் ஏரி தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையொட்டி, கலங்கள் வழியாக நீர் வழிந்து வெளியேறுகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்தால், உபரிநீர் மதகுகள் வழியாகத் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.