’ஒன்றிய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ - வேல்முருகன்
வன்னியர்களுக்கான 10,5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரதது செய்யப்படுவதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ”இந்த தீர்ப்பை இடைக்காலத் தடையாகவே பார்க்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த தடையை நீக்குவார். நீதிமன்றம் புரிந்து கொள்ளாமல் இந்த தீர்ப்பை வழங்கியதாக ஐயப்படுகிறேன். இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதற்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.