படியில் பயணம் நொடியில் மரணம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவன்! - வேலூர்
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம் அடுக்கம் பாறையில் செயல்பட்டு வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் சாத்துமதுரையிலிருந்து அடுக்கம் பாறை நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் பின்பக்கப் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது தீடீரென மாணவர் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்தார். பேருந்து மெதுவாகச் சென்றதால் எந்தவித காயமுமின்றி அந்த மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தை, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
Last Updated : Sep 30, 2019, 1:49 PM IST