"புன்னகை மன்னன்" பட பாணியில் மலையிலிருந்து குதித்த காதல் ஜோடி! - போளூர்
திருவண்ணாமலை : போளூர் அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமாரும், ஆம்பூரைச் சேர்ந்த நீலாம்பரி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த காதலர்கள் சம்பத்கிரி மலையிலிருந்து குதித்தனர். பின்னர், பாறைகளில் சிறு காயங்களுடன் சிக்கியிருந்தவர்களை தீயணைப்புத் துறையினரும், அப்பகுதி மக்களும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.