லாரி- ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்! - ஷேர் ஆட்டோ மோதி விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள காத்தான் கடை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பவுஞ்சூர் நோக்கி லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதேபோல் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரியும் ஆட்டோவும் சாலையின் குறுக்கே கடக்கும் போது எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கூவத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.