நாகையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
நாகை: விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் சௌந்திரராஜப் பெருமாள் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், இந்தச் சிலைகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை பாஜக, அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடங்கிவைத்தனர்.