மதுபானக் கடையில் குடையுடன் குவிந்த குடிமகன்கள்! - Liquor store umbrella
திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள அரசு மதுக்கடையில் ஏராளமான மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் குடையுடன் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்க குவிந்தனர். இதையடுத்து, மதுப் பிரியர்களை கட்டுப்படுத்த கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு, குடையுன் வந்த நபர்களுக்கு தகுந்த இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவு மது வழங்கப்பட்டது.