வேகமாக சாலையை கடந்து சென்ற சிறுத்தை! - வேகமாக சாலையை பாய்ந்து சென்ற சிறுத்தை
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தொரப்பள்ளி முதல் கர்நாடக மாநிலம் குன்டல்பெட் பகுதி வரை செல்லும் சாலை இருபுறமும் முதுமலை மற்றும் பந்திப்பூர் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள சாலையில் புலிகள், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் சாலையை கடப்பதும் நீர்நிலைகளில் தஞ்சமடையும் நிகழ்வும் அவ்வப்போது நடக்கும். இந்நிலையில், இன்று (ஜன.8) காலை அங்கலா பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து வந்து சாலையை கடந்தது. இதனை கூடலூர் பகுதியில் இருந்து சென்ற வாகன ஓட்டிகள் தனது செல்போனில் படம்பிடித்து சென்றனர்.
TAGGED:
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம்