கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவு - kovai jallikattu works complete
கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுகிழமையன்று செட்டிபாளையம் பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள், விழா மேடை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று (பிப். 19) வாடிவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.