யானைகள் நலவாழ்வு முகாம் - ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைக்கப்பட்ட ‘கோதை’ - ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில்
யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கப்பட்டு பகுதியில் நாளை (பிப்.08) ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 27ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நலவாழ்வு முகாமில் கலந்துகொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் யானை கோதை லாரி மூலம் தேக்கப்பட்டு பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கோயில் யானை கோதையை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, மதசார்பு அறங்காவலர் சம்பத், ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.