விவசாயம் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது; விவசாயிகள் வேதனை! - வேதனை
நாகப்பட்டினம் : கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையிலிருந்து கடந்த 13-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒருமாத காலம் முடிந்த நிலையில் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு வந்து சேரவில்லை. தற்போது கொள்ளிடம் ஆற்றிலிருந்து 30ஆயிரம் கனஅடி உபரி நீர் வீணாக கடலில் சேர்கிறது. இந்த, நீரை நம்பியே கடைமடைப் பகுதி விவசாயிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் வீணாக திறந்துவிடப் படுகிறது. இதனால், விவசாயம் முற்றிலும் அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.