தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கொடைக்கானலில் கடுமையான மழை: மண்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து துண்டிப்பு! - கொடைக்கானல் மழை

By

Published : Dec 1, 2021, 9:37 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாகவே அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் பெய்து வந்த மழையால், குறிப்பாக கொடைக்கானல் மலைக் கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை, செண்பகனூர், பாம்பார்புரம், அப்சர்வேட்டரி ,நாயுடுபுரம், உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் கன மழையானது கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரமானது முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. நிறைய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details