கொடைக்கானலில் கருப்பு நிற கேரட் விவசாயம்! - கொடைக்கானலில் கருப்பு நிற கேரட் விவசாயம்
திண்டுக்கல்: கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆசிர். விவசாயித்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், இயற்க்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். கேரட் , முள்ளங்கி, நூக்கல் ஆகியவற்றை விவசாயம் செய்துவருகிறார். ஆன்லைன் மூலம் கருப்பு நிற கேரட் விதைகளை வாங்கி தனது நிலத்தில் அதனை பயிரிட்டுள்ளார். கருப்பு நிற கேரட்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்த கேரட்டில் அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசயனின் என்ற நிறமி அதிகம் இருப்பதால் அதன் வண்ணம் கருப்பாக காணப்படுகிறது. மேலும் இதன் சுவை இனிப்பாகவும் சாப்பிட்ட பின்பு நாவில் லேசான கார சுவையுடன் இருக்கும் என ஆசிர் தெரிவிக்கிறார். கருப்பு நிற கேரட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.