பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த விபரீதம்! - பாம்பு பிடி வீரருக்கு நிகழ்ந்த பரிதாபம்
கோட்டயம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். இவர் வீடு, நிறுவனங்களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் புகுந்தால், அதைப் பிடித்து காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார். இந்நிலையில், கோட்டயம் பகுதியில் பாம்பு ஒன்றைப் பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக பாம்பு அவரது தொடையில் கடித்தது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், சுய நினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.