குடிநீர் குழாய் உடைந்து எரிமலை போல் கொப்பளிக்கும் தண்ணீர் - Kaveri Drinking water pipes Broked
திருச்சி மாவட்டம் மணப்பாறை-மதுரை செல்லும் பகுதியில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்ட குழாய் உடைந்து நீர் பீய்ச்சியடித்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக, குழாயின் அழுத்தம் காரணமாக லட்சக்கணக்கான நீர் வெளியேறி அருகில் இருந்த ஓடையில் ஆறாக ஓடியது. இந்நிலையில் நீர் முழுவதும் வடிந்த பின்னரே குழாய் உடைப்பை சரி செய்ய முடியும் என்றும், மீண்டும் நீர் ஏற்றம் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மேலூர் பகுதிக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.