காருண்யா நகரான நல்லூர் வயல்: பெயரை மாற்றக் கோரி சாலை மறியல் - காருண்யா நகரான நல்லூர் வயல்
கோயம்புத்தூர் மாவட்டம் காருண்யா பல்கலைக்கழகம் அருகே உள்ள காருண்யா நகர் முன்பு நல்லூர் வயல் என்று அழைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அக்கிராமத்தின் பெயரை நல்லூர் வயல் என மாற்ற வேண்டும் எனக் கோரி நல்லூர் வயல் மீட்புக்குழுவினர் 300க்கும் மேற்பட்டோர் ஆலாந்துறையில் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுப்பட்டனர். பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.