கார்த்திகை தீபத் திருநாள்: கோயில்களில் மகா தீபம் ஏற்றம்! - ஸ்ரீ அருணாசல ஈஸ்வரர் திருக்கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வடசென்னையில் பிரசித்திப் பெற்ற தண்டையார்பேட்டையில் அமைந்திருக்கும் 240 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலை மேலுள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பெரும்பாலானோர் தங்களது இல்லங்களில் அகல் விளக்கேற்றி தீபத் திருநாளை கொண்டாடினர்.