சத்தியமங்கலத்தில் கொட்டும் மழையில் கார்த்திகை தீப விழா! - சத்தியமங்கலத்தில் கார்த்திகை தீப விழா
தமிழ்நாட்டில் கார்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பெண்கள் புத்தாடை உடுத்தி வீட்டின் முன் கோலமிட்டு தீபம் ஏற்றினர். குறிப்பாக கொட்டும் மழையிலும் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.