கண்டியன்குளம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருச்சம்பள்ளியில் அமைந்துள்ள கண்டியன்குளம் மகா மாரியம்மன் கோயிலில் இன்று (மார்ச் 24) குடமுழுக்கு நடைபெற்றது. இதில் விமான குடமுழுக்கும், மூலவருக்கு மகா திருமுழுக்கும் நடத்தப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.