காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வெள்ளித்தேர் உற்சவம்
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி வெள்ளித்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஊரடங்குத் தளர்வுக்குப் பின்னர் வெள்ளித்தேர் உற்சவத்தை முன்னிட்டு முருகனுக்குச் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. முருகனை வழிபட திரளாக குவிந்த பக்தர்கள் வெள்ளித்தேரை வடம்பிடித்து கோயில் வளாகத்தில் இழுத்துச்சென்று வழிபட்டனர்.
TAGGED:
காஞ்சிபுரம்