ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் - மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய முக்கிய நகரங்கள் - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கோயில் நகரமான காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தனது வாகனத்தில் அபாய ஒலி ஒலித்தவாறே காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில் வலம் வந்து தேவையின்றி சுற்றி வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். திருநெல்வேலி காவல் துணை ஆணையர் ( கிழக்கு) சுரேஷ்குமார் தலைமையில் 350 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.