காமராஜர் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களைக் கவர்ந்த தோல்பாவைக்கூத்து! - பொம்மலாட்டம் வடிவில்
காமராஜரின் பிறந்தநாளான நேற்று, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள, ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை தோல்பாவைக்கூத்தின் வழியாக மாணவர்களுக்கு அப்பள்ளி நிர்வாகம் காட்சி செய்தது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தோல்பாவைக்கூத்தானது, காமராஜர் முதலமைச்சர் பதவி வகித்தபோது நடைபெற்ற சம்பவங்களை விளக்கியது.