சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு.. இளமை முறுக்குடன் சிலம்பம் சுத்திய கமல்ஹாசன்! - சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
கோயம்புத்தூர்: எதிர் வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கிடையே நேற்று வேட்புமனு தாக்கல் செய்த கமல், இன்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வீரமாருதி தேகபயிற்சி சாலைக்கு சென்று அங்கிருந்த புகைப்படங்களைக் கண்டு ரசித்தார். அங்கு அவர் சிலம்பம் சுற்றிய வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சின்னப்ப தேவரால் நிறுவப்பட்டதும், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.