தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் : 4-வது நாளாக ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம் - கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலை வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சுரேஷ் தனது நண்பர்களுடன் கல்வராயன் மலையில் உள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில் சுரேஷ் கல்லில் வழுக்கி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுபற்றிய தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை இரண்டு தினங்களாகத் தேடி வந்த நிலையில் இன்று 4-வது நாளாக ட்ரோன் கேமரா மூலமாகச் சிறுவனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.