'நாட்டு மக்களுக்குத் தாயுமானவராகத் திகழும் ஸ்டாலின்!' - teacher thank cm stalin with Thayumanavar words
கள்ளக்குறிச்சி:குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருக்கோவிலூர் அருகே சிவனார் தாங்கள் அரசுப் பள்ளியின் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் செல்வம், ஸ்டாலினைப் பாராட்டும்விதமாக, 'தாயுமானவர் என்றும் மக்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பவர் ஸ்டாலின்' என்று ஓவியம் தீட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக, தாயுமானவர் என்ற சொல்லின் மூலம் ஸ்டாலினின் முகத்தை தத்துரூபமாகத் தீட்டியுள்ளார்.