கண்மாய்க்குள் குறுங்காடு வளர்ப்பு! - அசத்தும் இளைஞர்கள் அமைப்பு! - கண்மாய்க்குள் குறுங்காடு வளர்ப்பு அசத்தும் இளைஞர்கள் அமைப்பு
நிலவளத்தையும், நீர் வளத்தையும் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அண்மைக் காலமாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில், கண்மாய்க்குள் குறுங்காடுகளை வளர்க்கும் புதிய முயற்சியை சாத்தியப்படுத்தியுள்ளது கடைமடைப் பாசனப் பகுதி விவசாய இளைஞர்களின் அமைப்பான கைஃபா.