வலுவான வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு! - அதிமுக கடம்பூர் ராஜு
அமமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக களம் கண்ட டிடிவி தினகரன், அதிமுக அதிருப்தியாளர்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என கூறப்பட்டுவந்தது. வலுவான வேட்பாளர்களுக்கு இடையே எளிமையான முறையில் திமுக கூட்டணி கட்சிகளின் துணையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் களம் கண்டார். சிபிஎம் வேட்பாளர் சீனிவாசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இருப்பினும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, மீண்டும் வெற்றி வாகை சூடியிருக்கிறார் கடம்பூர் ராஜு.