தர்மபுரியில் கால பைரவர் ஜெயந்தி - oldest kaala bhairava temple
தர்மபுரி அதியமான் கோட்டையில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. காசிக்கு அடுத்ததாக கால பைரவருக்கு தனி ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இங்கு கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலையில் பால், தயிர், சந்தனம் தேன் உள்ளிட்டவை கொண்டு கால பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.