25 ஆண்டுகளாக தொகுதிக்கு ஜெயக்குமார் எதையுமே செய்யவில்லை! - ’ஐட்ரீம்ஸ்’ மூர்த்தி - ஐட்ரீம்ஸ் மூர்த்தி
சென்னை: ராயபுரத்தில் அடிப்படை பிரச்சனைகள் எதையுமே ஜெயக்குமார் சரி செய்யாததோடு, புதிய திட்டங்கள் ஒன்றையும் தொகுதிக்கு கொண்டு வரவில்லை என குற்றஞ்சாட்டி வாக்கு சேகரிக்கிறார் திமுக வேட்பாளர் ’ஐட்ரீம்ஸ்’ மூர்த்தி. மேலும், கடந்த 25 ஆண்டுகளாகவே ஜெயக்குமார் மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை என்று புகார் கூறும் மூர்த்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாய் ராயபுரம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டு, அதில் ஒரு கோடி ரூபாய் கூட அவர் செலவழிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.