அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகளை அடக்க துடிக்கும் வீரர்கள் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் துள்ளிப்பாய்ந்து அடக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.