சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி - independence day rehearsal
நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் இன்று சுதந்திர தின விழா ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துறையினர், ஊர்காவல் படையினர், என்எஸ்எஸ் மாணவர்கள் தேசிய நாட்டு நலப்பணி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிதா பானு ஏற்றுக்கொண்டார்.