போலியோ விழிப்புணர்வு தினம்: ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய பரப்புரை! - polio day
நாடு முழுவதும் இன்று (அக். 24) போலியோ விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரோட்டரி சங்கத்தினர், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், திலகர் திடல், டிவிஎஸ் கார்னர், பெரியார் நகர், கம்பன் நகர், கலெக்டர் அலுவலகம், கீழ ராஜவீதி என நகரத்தின் முக்கிய பகுதிகளில் போலியோ தினத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக SDC நடனப்பள்ளி குழுவினருடன் இணைந்து நடனமாடி விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.