சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி! - சென்னை மழை பாதிப்பு செய்திகள்
இன்று (ஜன. 06) காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.