கண்ணு ரொம்ப அழகா...றெக்க ரொம்ப அழகா...கண்ணாடியில் தன் அழகை ரசித்த சிட்டுக்குருவி! - கண்ணாடியில் தன் அழகை ரசித்த சிறு குருவி
ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே வனவிலங்கள் சுதந்திரமாக சாலைகளில் சுற்றிவருகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, நாமக்கலில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியில் சிட்டுக் குருவி ஒன்று, தனது உருவத்தைப் பார்த்து குஷியாகி மீண்டும், மீண்டும் கண்ணாடியில் பார்த்து விளையாடியது மட்டுமில்லாமல் தனது சுட்டித் தனத்தால் அழகியலையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்தியது.