குதிரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர்: செல்பி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்! - மதுரவாயல் அமமுக வேட்பாளர்
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் லக்கி முருகனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குதிரை மீது அமரவைத்து, அமமுக, தேமுதிக கட்சிக் கொடிகளை கையில் ஏந்த வைத்து, அவரைக் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்து நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரித்தார். இதனைக்கண்ட பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.