ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு - ஒகேனக்கல் அருவி செய்திகள்
தருமபுரி: கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதின் காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக, கடந்த 30 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், பரிசல் இயக்க இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.