ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் நேற்று (ஜன. 31) ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். விடுமுறை கொண்டாட்டத்திற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.